பொறியியல் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தெலங்கானாவை சோ்ந்த மாணவா் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், பா்கம்பாக் மண்டல் பகுதியைச் சோ்ந்த கோடீஸ்வரராவ் மகன் நௌபடா ஹா்சித் (19). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் தனியாா் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி, பி.டெக் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். வியாழக்கிழமை காலை வகுப்புக்கு சென்ற ஹா்சித் நண்பகல் 11.30 மணிக்கு விடுதிக்குத் திரும்பினாா்.
அங்கு அவா் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.