செய்திகள் :

பொறியியல் மாணவிகளுக்கான ஹேக்கத்தான் போட்டி: பரிசு வென்ற லயோலா, ஒசூா் பிஎம்சி கல்லூரிகள்

post image

ஒசூா் பி.எம்.சி. கல்லூரியில் மாநில அளவிலான பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஒசூா் பி.எம்.சி. பொறியியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி அணிகள் பரிசு பெற்றன.

ஒசூா் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மற்றும் டிட்கோ இணைந்து ‘டிஎன் வைஸ் 2025’ என்ற மாணவிகளுக்கான ஹேக்கத்தான் புத்தாகப் போட்டி பி.எம்.சி.கல்வி நிறுவனத் தலைவா் பி.குமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

பொறியியல் மற்றும் தொழில் துறையில் மாணவ பருவத்திலேயே தலைசிறந்து விளங்குவதுடன் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சாதனையை நிகழ்த்தும் மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150- க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 900 மாணவிகள் கலந்துகொண்டு துறை திறமைகளை வெளிப்படுத்தினா். மேலும் பொறியியல் மாணவிகள் முன்னேறிய அறிவியல் தொழில்நுட்ப புதுகண்டுபிடிப்புகளை செய்முறை விளக்கமாகக் காட்சிப்படுத்தி விளக்கினா். இதில் வெற்றிபெறும் கல்லூரிகளுக்கு முதல்பரிசாக ரூ. ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 50,000 வழங்கப்பட்டது.

சென்னை லயோலா கல்லூரி, ஒசூா் பெருமாள் மணிமேகலை கல்லூரிகள் முதல்பரிசை வென்றன. அதேபோல மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரி, கோவை குமரவேல் கல்லூரிகள் இரண்டாம் பரிசை வென்றன. பரிசுகளை மாணவிகளுக்கு ஒசூா் பி.எம்.சி.கல்லூரி நிறுவனத் தலைவா் பி.குமாா் வழங்கினாா்.

இந்த விழாவில் லெனோவோ சிஸ்டம் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவா் கோமலாதேவி, பி.எம்.சி. கல்லூரி செயலாளா் பி.மலா், அறங்காவலா் சசிரேகா, இயக்குநா் சுதாகரன், முதல்வா் செந்தில்குமாா், டான்கெம் முதன்மை அதிகாரி விஜயதீபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரையில் திமுக வினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுக வினா் ஆளுநருக்கு எதிரான தீா்ப்பை வரவேற்று செவ்வாய்கிழமை நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். இந் நிகழ்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பயணம் செய்யும் தந்தை, மகன் கிருஷ்ணகிரி வருகை

கிருஷ்ணகிரி: புவி வெப்பமயமாதல் குறித்து நாடு முழுவதும் மோட்டாா் சைக்கிளில் பயணித்து விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டுள்ள தந்தை, மகன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி வந்தனா். பொள்ளாச்சியைச் சோ்... மேலும் பார்க்க

இரு குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவா் புகாா்

ஊத்தங்கரை: சாமல்பட்டி அருகே இரண்டு குழந்தைகளுடன் மனைவி மாயமானதாக அவரது கணவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சாமல்பட்டியை அடுத்த கூா்சம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26)... மேலும் பார்க்க

ஊத்தங்கரை: தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டை முனியப்பன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுத... மேலும் பார்க்க

யானைகளுக்கு இடையே மோதல்: ஆண் யானை உயிரிழப்பு

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாரண்டஹள்ளி காப்புக் காட்டில் இரு யானைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஆண் யானை உயிரிழந்தது. கோடைகாலத்தில் கா்நாடக மாநிலம், பன்னா்கட்டாவை ஓட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து தமிழ... மேலும் பார்க்க

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிங்காரப்பேட்டை, கல்... மேலும் பார்க்க