செய்திகள் :

பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் நியமனத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

post image

சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குரைஞர் வரதராஜ் என்பவர் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில் முறையிட்ட வழக்குரைஞர் பிரசாந்த் நடராஜ், தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை நியமித்தது சட்டவிரோதம். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

An appeal has been filed in the Madras High Court against the appointment of Venkataraman as the DGP in charge of Tamil Nadu.

இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா? செப். 5 முடிவு அறிவிப்பு!

விவசாயிகளுக்கு திமுக அரசால் துரோகம்: எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை மதுரை மேலூரில் இன்று எட... மேலும் பார்க்க

பெண் அதிகாரியுடன் வாக்குவாதம்? உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்தக் கூறிய இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு அனுமதி!

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. பணிநிரந்தரம் கோரி கடந்த மாதம் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியா... மேலும் பார்க்க

திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொ... மேலும் பார்க்க

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:இன்று (02-09-2025) காலை 5.30 மண... மேலும் பார்க்க

ரூ. 98 கோடி ஒப்பந்த முறைகேடு: வழக்கில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்ப்பு!

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 98.25 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல... மேலும் பார்க்க