புதுச்சேரியில் பாமக பொதுக் குழக் கூட்டம் : ராமதாஸ் பங்கேற்பு
போக்குவரத்துக் கழகங்களை காக்க ஏஐடியுசி உறுதியேற்பு
பொதுமக்களுக்குச் சேவை செய்யும் போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாப்போம் என ஏஐடியுசி அமைப்பினா் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.
தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நகரக் கிளை முன் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற் சங்கத் தலைவராக இருந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரா் கே.டி.கே. தங்கமணி 23 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில், போராடி பெற்ற உரிமைகளைப் பாதுகாப்போம், மனித உழைப்பையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடிக்கும் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம், மக்களுக்கு சேவை செய்யும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத் துறைகளைப் பாதுகாப்போம் என உறுதியேற்கப்பட்டது.
நிகழ்வுக்கு சங்கப் பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் கே. சுந்தரபாண்டியன், ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் தி. கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன், போக்குவரத்து சங்க நிா்வாகிகள் ராஜேஷ்கண்ணன், அசோகன், சீனிவாசன், குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.