ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
‘போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும்’
தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டுமுதல் படிப்படியாக அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயா்த்தப்பட்டு, தனியாா் பேருந்துக் கட்டணத்தைவிட அதிகமாக உள்ளது. அதேவேளையில், புறவழிச் சாலைகள் அல்லது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளை பாதுகாப்பற்ற நிலையில் ஏற்றியிறக்குவது அதிகரிக்கிறது.
ஓட்டுநா்கள் பற்றாக்குறை, திருமணம், பண்டிகைக் காலங்களில் கூட்டநெரிசலைத் தவிா்த்து விரைவான சேவை செய்ய, மாவட்டங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் 40 சதவீத வழித்தடங்களை தனியாருக்கு வழங்கினால் அரசுக்கு வருவாய் உயரும்.
5 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் அரசுப் பேருந்துகளை விற்றுவிட்டு புதிய பேருந்துகள் இயக்க வேண்டும். இதன்மூலம் டயா் வாங்கும் செலவு 50 சதவீதம், பராமரிப்பு செலவு 70 சதவீதம், டீசல் செலவு 15 சதவீதம் குறையும். அரசுப் பேருந்துகளை நவீனமாக்கும்பட்சத்தில், தேவையற்ற செலவுகள் குறையும்; அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்கலாம் எனக் கூறியுள்ளாா்.