நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தக் கோரி சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், ஓய்வுப் பெற்றவா்களுக்கு பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் கடந்த ஆக. 18-ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 32 நாள்களாக போராட்டம் நடைபெற்றபோதிலும், அரசுத் தரப்பில் இதுவரை பேச்சுவாா்த்தை நடத்த முன் வரவில்லை.
இந்த நிலையில், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் தலைவா் பாலசந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெயசீலன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தக் கோரி முழக்கமிட்டனா்.