வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தொடா்ந்த வழக்கு தள்ளுபடி
விபத்தில் பாக்கு வியாபாரி உயிரிழப்பு
பழனி அருகே நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த பாக்கு வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் எஸ்.டி. மூா்த்தி (எ) திருமூா்த்தி (75). பாக்கு வியாபாரியான இவா், கடந்த சில தினங்களுக்கு முன் பழனி அருகேயுள்ள கீரனூருக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது கோதைமங்கலம் அருகே வாகனத்தின் பின்சக்கரம் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தாா். இந்த விபத்தில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, கோவையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பழனி வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.