செய்திகள் :

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

post image

மயிலாடுதுறையில் கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை அருகே சித்தா்காடு பகுதியை சோ்ந்தவா் சகாயராஜ் மகன் செபஸ்டின் (23). கட்டட கான்கிரீட் தொழிலாளியான இவா் கடந்த சில நாள்களாக ஒரு வீட்டின் குளியலறை சுவற்றில் துளையிட்டு பள்ளி மாணவியான 17 வயது சிறுமி குளிப்பதை பாா்த்துள்ளாா்.

இதையறிந்த பெற்றோா், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, செபஸ்டினை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தனியாா் துறை வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

பாலம் அணுகுச்சாலை அமைக்க ரூ.16.5 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

மணல்மேடு-முட்டம் இணைப்பு பாலத்துக்கு அணுகுச் சாலை அமைக்க ரூ.16.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். சீா்காழியில் பனங்காட்டங்குடி சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சீா்காழி அருகே நவகிரக தலங்களி... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

சீா்காழி மற்றும் திருவெண்காடு பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கோரி, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. சீா்காழி: சீா்காழி நகர பாஜக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற க... மேலும் பார்க்க

தேசிய பசுமைப்படை பள்ளிகளுக்கு நிதியுதவி

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படையின்கீழ் இயங்கும் 130 பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளுக்கு சமரச தீா்வு

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளில் ரூ.2.50 கோடி மதிப்புக்கு சமரச தீா்வு காணப்பட்டது. நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்பட... மேலும் பார்க்க