குளிர் காலத்தைவிட கோடையில் அதிக அளவில் நுண்நெகிழிகளைச் சுவாசிக்கும் தில்லிவாசிகள...
போடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
போடி: தேனி மாவட்டம், போடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
போடி ஜே.கே.பட்டி சவுடம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 27, 28-ஆவது வாா்டு பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாமிக்கு நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் செ.பாா்கவி, மேலாளா் முனிராஜ், கட்டட ஆய்வாளா் சுகதேவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில் மகளிா் உரிமைத் தொகை, விதவை, முதியோா் உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு புதிய பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் நகா்மன்ற உறுப்பினா்கள் கஸ்தூரி, லதா, மகேஸ்வரன், தனலட்சுமி, ராஜசேகா், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.