செய்திகள் :

போடியில் பலத்த மழை

post image

போடி பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

போடி பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்களில் நீா் இருப்பு குறைந்து வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதியில் மிதமான மழை பெய்த நிலையில், புதன்கிழமை காலையில் தொடங்கி மாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனியிலிருந்து போடிக்கு மகளிா் கட்டணமில்லா பேருந்து புதன்கிழமை இயக்கப்பட்டது. பிற்பகலில் பெய்த மழையால் இந்தப் பேருந்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீா் ஒழுகின. இருக்கைகளில் அமர முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினா். இந்தப் பேருந்தை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினா்.

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளத்தில் சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி மீது ஆட்டோ மோதியதில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம், வடகரை, ஸ்டேட் வங்கி காலனி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகட்டி (60). இவா், பெ... மேலும் பார்க்க

தேனியில் மாா்ச் 18-இல் மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

தேனி மின் வாரியச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மின் வாரியச் செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

மாசி மாத பெளா்ணமியையொட்டி, போடியில் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாகப் பெய்த மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு வியாழக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பருவ மழைக் காலம் முடிவடை... மேலும் பார்க்க

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினா் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தேனி, திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்... மேலும் பார்க்க