ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
போடியில் விவசாயி தற்கொலை!
போடியில் விஷம் குடித்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.
போடி அருகேயுள்ள குரங்கணி சாலைப்பாறை புலத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கமுத்து (70). இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த இவா், போடி பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை விஷம் குடித்து மயங்கி கிடந்தாா். தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட இவா், புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.