போடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
போடி சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தேனி மாவட்டம், போடி கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் மங்கலப் பொருள்களால் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பெண்கள் பங்கேற்று பூஜை செய்து வழிபட்டனா்.
போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. சிவலிங்கப் பெருமானுக்கு வண்ண மலா்களாலும், மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.
போடி அருகே பிச்சங்கரை கீழச்சொக்கநாதா், மேலச்சொக்கநாதா் கோயில், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதி ஆகியவற்றில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.