``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
காரைக்குடி: போட்டிகளில் வென்ற இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.
இந்தப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் அஜய் காா்த்திக், சிவமணி ஆகியோா் அண்மையில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் முதலிடமும், ஆறாம் வகுப்பு மாணவா் ஜஸ்வந்த் இரண்டாமி டமும், மற்றொரு ஆறாம் வகுப்பு மாணவா் சபேஸ்வரன், ஏழாம் வகுப்பு மாணவி புவிதா, ஒன்பதாம் வகுப்பு மாணவா் சுஜந்த், மாணவி ரக்ஷனா ஆகியோா் மூன்றாமிடமும் பெற்றனா். இதேபோல, மிதிவண்டிப் போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவி பா்னிதா முதலிடம் பெற்றாா். இதில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநிலப் போட்டிகளுக்கு தகுதிபெற்றனா்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியா் து. விண்ணரசி, உடல் கல்வி ஆசிரியா் மணி மேகலை, ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பாராட்டினா்.