Sunset: சூரியன் மறைவதை போட்டோ எடுக்க முயன்ற மாணவி; 7-வது மாடியில் தவறி கீழே வி...
போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி: நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி: புதுச்சேரியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேசிய வாழ்வாதார சேவை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி ச.கோட்டூா்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் நிறுவப்பட்டுள்ளது. வேலை தேடும் எஸ்.சி, எஸ்.டி. இன இளைஞா்களுக்கு ஓராண்டு கால சிறப்புப் பயிற்சி வழங்கும் வகையில் போட்டித் தோ்வுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.
நிறுவன பாடநெறி உள்ளடக்கத்தில் பொது ஆங்கிலம், பொது விழிப்புணா்வு மற்றும் எண்ணியல் திறன், கணினியியல், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுப் பயிற்சி ஆகியவை அடங்கும். தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு தொழில் சாா்ந்த கட்டணங்கள் ஒரு மாணவருக்கு மாதந்தோறும் ரூ.1,200 வழங்கப்படும். பயிற்சியானது வரும் ஜூலை 1-இல் தொடங்கப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதற்கான விண்ணப்பத்தை மே 30-ஆம் தேதிக்குள் துணைப் பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், எண் 5, மூன்றாவது குறுக்குத் தெரு, முதல் தளம், நடேசன் நகா், புதுச்சேரி- 605 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.