செய்திகள் :

போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை.. சென்னையில் 3 பேர்கைது; பின்னணி என்ன?

post image

சென்னையில் போதைக்காக சிலர் உடல் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. அதனால், பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக 12 காவல் மாவட்டங்களில் போலீஸ் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விக்னேஷ்

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியான T.H. ரோடு மற்றும் தொப்பை விநாயகர் கோயில் சந்திப்பு பகுதியில் போதைக்காக உடல் வலி நிவாரண மாத்திரைகள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த 3 பேரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்தபோது, அதில் உடல்வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. அதுகுறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி வாகனச் சோதனையில் ஈடுபட்டோம். அப்போது அவ்வழியாக வந்த பெண் உள்பட மூன்று பேரிடம் விசாரித்தோம். அவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் வைத்திருந்தனர். அதுகுறித்து விசாரித்தபோது போதைக்காக சிலர் உடல் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவதும் அதற்காக சட்டவிரோதமாக இந்த மாத்திரைகளை விற்பதும் தெரியவந்தது.

உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்ற மேனகா

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தோம். விசாரணையில் அவர்கள் கொடுங்கையூரைச் சேர்ந்த விக்னேஷ் (25), அவரின் அம்மா மேனகா (40), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷின் கூட்டாளி தினகரன் (23) எனத் தெரியவந்தது.

இவர்களிடமிருந்து 490 மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸார் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். இதில் விக்னேஷ், மும்பையிலிருந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி வந்து, சென்னையில் அவரது தாய் மற்றும் கூட்டாளி தினகரனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்திருக்கிறார்.

கைதான விக்னேஷ் மீது 3 குற்ற வழக்குகளும், மேனகா மற்றும் தினகரன் மீது தலா ஒரு குற்ற வழக்கும் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

போதை மாத்திரை விற்ற வழக்கில் தாய், மகன் கைதான சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Meghalaya Honeymoon Horror: திரைப்படமாகும் மேகாலயா தேனிலவு கொடூரம்!

மேகாலயாவில் கடந்த மே மாதம் தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்சியை அவரது மனைவி தனது காதலன் துணையோடு அடியாட்களை வைத்து கொலை செய்தார். இப்படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மா... மேலும் பார்க்க

சென்னை கல்லூரி மாணவன் கார் ஏற்றி கொலை - திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் கைது பின்னணி

சென்னை, அயனாவரம், முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர், நித்தின் சாய் ( 20). இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவரின் நண்பன், அயனாவரம் பி.இ., கோய... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா; எட்டி உதைத்துத் தள்ளிய பேத்திகள்; போக்சோ வழக்கில் முதியவருக்குச் சிறை

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு 19 வயதிலும் 11 வயதிலும் இரண்டு மகள்கள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால் 74 வயதான மாமனாரும் அந்த வீட்டில் வசித்து வந்தார்.கைதுதினமும் ... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு மாணவர்களிடம் வீடியோ காலில் ஆபாசம்; போக்சோ-வில் ஆசிரியை கைது

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் பள்ளி ஆசிரியை (35) ஒருவர் இரவு நேரத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோ... மேலும் பார்க்க

பெங்களூரு: அதிகாலையில் நடைப்பயிற்சி செய்த முதியவர்; கடித்துக் கொன்ற தெரு நாய்கள்; என்ன நடந்தது?

பெங்களூருவில் முதியவர் ஒருவரை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவில் உள்ள கொடிகேகல்லி என்ற இடத்தில் வசித்தவர் சீத்தப்பா (70). இவர் இரவில் ... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு : `சாப்பிட முடியல, கடைக்குகூட போக முடியவில்லை’ - புகார் கொடுத்த நிகிதா

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரிடமும் இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணை நடத்தியது. அஜித்குமார் கொலை... மேலும் பார்க்க