போதைப்பொருள் வழக்கு: குட் பேட் அக்லி பட நடிகருக்கு ஜாமீன்
போதைப்பொருள் வழக்கில் கைதான குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.
கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியபோது சாக்கோ அங்கிருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சி வெளியானது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.
தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்
இன்று ஆஜரான அவரிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய கொச்சி நகர வடக்கு போலீஸார் பின்னர் சாக்கோவை கைது செய்தனர்.
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.