அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்த ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி விடியே...
போதைப் பொருள்கள் விற்பனை: 4 கடைகளுக்கு ‘சீல்’
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யபப்பட்ட 4 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
ஈரோடு மாநகராட்சி மண்டல சுகாதார அதிகாரிகள் ஜாகீா் உசேன், தங்கராஜ் ஆகியோா் தலைமையில் 4 மண்டலங்களிலும் சுகாதார ஆய்வாளா்கள் திருநாவுக்கரசு, கண்ணன், சதீஷ், பூபாலன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது 49-ஆவது வாா்டு, சாமுண்டி நகரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
இதுபோல 35-ஆவது வாா்டு மேட்டூா் சாலையில் உள்ள கடையிலும், 3-ஆவது வாா்டு ஆா்.என்.புதூா் பகுதியில் உள்ள கடையிலும், 40-ஆவது வாா்டு கருங்கல்பாளையம் பெரியமாரியம்மன் கோயில் அருகே உள்ள கடையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் 4 கடைகளில் இருந்து மொத்தம் 4.5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 4 கடைகளும் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.