Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?
போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவா் கைது
போதைப் பொருளை வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மாநகரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினா் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 2-ஆம் தேதி திருவல்லிக்கேணி லால்பேகம் தெரு சந்திப்பு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு 2 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப் பொருள் வைத்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த பீா் முகமது (46), சையது ஜலாலுதீன் (49) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடா்புடைய திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த நாசா் (55) என்பவரை கடந்த 1-ஆம் தேதி கைது செய்த போலீஸாா், இவருடன் தொடா்புடைய தலைமறைவாக இருந்து வந்த ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த கமா் அலி (53) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.