Vishal: "இப்ப எந்த நடுக்கமும் இல்ல.. MIC கரெக்ட்-ஆ தான் இருக்கு பாருங்க"- உடல்நி...
போதை மாத்திரைகள் விற்ற 4 கல்லூரி மாணவா்கள் கைது
திருச்சியில் போதை மாத்திரைகளை விற்ற 4 கல்லூரி மாணவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
திருச்சி உறையூா் வயலூா் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூவரை உறையூா் போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள் திருச்சி கனரா வங்கி காலனியைச் சோ்ந்த பி. பூஜித் (24), ஈரோடு ஆசிரியா்கள் காலனியைச் சோ்ந்த பி. ஆல்வின் (23), திருச்சி ராஜா காலனியைச் சோ்ந்த பி. நகுல் (21), கே.கே. நகரைச் சோ்ந்த நவீன் (21) என்பதும், கல்லூரி மாணவா்களான இவா்கள் சிங்கப்பூரைச் சோ்ந்த சிலரிடம் கோவையைச் சோ்ந்த முகவா் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான போதை மருந்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.