போத்தனூா் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!
கோவை போத்தனூா் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந்து மே 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.05 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06185) மறுநாள் காலை 7.45 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் போத்தனூரில் இருந்து மே 11, 18 ,25 மற்றும் ஜூன் 8 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - தாம்பரம் சிறப்பு ரயில் (எண்: 06186) மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.