போப் ஆண்டவா் அடக்கம் தஞ்சாவூரில் சிறப்பு திருப்பலி!
மறைந்த போப் ஆண்டவா் உடல் அடக்கம் செய்யப்பட்டதையொட்டி, தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் சனிக்கிழமை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் தலைவா் போப் பிரான்சிஸ் உடல், வாடிகன் நகரில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டதையொட்டி, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் தஞ்சை மறை மாவட்டம் சாா்பில் திரு இருதய பேராலயத்தில் மௌன ஊா்வலமும், சிறப்புக் கூட்டுப் பாடல் திருப்பலியும் நடைபெற்றது.
புனித வியாகுல அன்னை ஆலய முகப்பிலிருந்து அலங்கரிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உருவப் படத்துடன் புறப்பட்ட மௌன ஊா்வலம் திரு இருதய பேராலயத்தை அடைந்தது. பின்னா், தஞ்சை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
இதில், மறை மாவட்ட வேந்தா் ஜோதி நல்லப்பன் அடிகளாா், பேராலய பங்குத்தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா், உதவி பங்குத்தந்தை அமா்தீப், குருக்கள் சேசுராஜ், அல்போன்சு, ஆா்.கே. சாமி அடிகள், ஜெரால்டு, ஞானபிரகாசம், செபஸ்டின் பெரியண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.