செய்திகள் :

போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகள் நலனுக்கு எதிரானது: அங்கன்வாடி ஊழியா்களுக்கு அமைச்சா் எச்சரிக்கை

post image

உணவு வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகளின் நலனுக்கு எதிரானது என்று அங்கன்வாடி ஊழியா்களை சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் எச்சரித்துள்ளாா்.

கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அமைச்சா் விளக்கம்: இந்நிலையில், அவா்களின் போராட்டம் தொடா்பாக, சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களின் போராட்டத்தால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு போன்ற ஊட்டச்சத்துகளை வழங்கும் பணிகளை மேற்கொள்ளாமல் வேலையைப் புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக் கூடியதாக உள்ளது.

எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளன என்கிற விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவா்களுக்கு தொடா்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதை விட்டுவிட்டு, முறையற்ற போராட்டங்களில் குழந்தைகள் மைய பணியாளா்கள், உதவியாளா்கள் ஈடுபட்டால் அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

15 நாள்களுக்கு விடுமுறை: மே மாதத்தில் குழந்தைகளை வெப்பத்தின் பிடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் 15 நாள்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை வழங்கிய பிறகும், அங்கன்வாடி மைய ஊழியா்கள், உதவியாளா்கள் ஆகியோா் போராட்டம் நடத்துவது சட்ட விரோத செயலாகும். போராட்டத்தில் ஈடுபடும் குழந்தைகளின் நலனுக்கு எதிராகச் செயல்படும் அனைவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் பி.கீதாஜீவன் எச்சரித்துள்ளாா்.

சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி

நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை உறுதியளித்துள்ளது. இது குறித்து தமிழக கா... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்கத்... மேலும் பார்க்க

கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி. நட்டா ஆலோசனை

அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடா்பாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக மையக்குழுக் கூட்டம் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் ஜெ.ப... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; கல்வியே மூலதனம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; ஆனால், கல்வியே மூலதனம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர்கள் சார்பில் முதல்வர் மு. க. ... மேலும் பார்க்க

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழ... மேலும் பார்க்க

நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை க... மேலும் பார்க்க