மாநிலங்களுக்கிடையே காா் திருடும் கும்பல் கைது: கார் உள்பட 4 வாகனங்கள் மீட்பு
போராட்டத்துக்கு போராட்டம்! தவெகவினர் கைது!
சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் சென்னையை சேர்ந்த தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறையினரின் நிபந்தனை அளித்ததற்கு எதிராக வெளிமாவட்ட தவெக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சிவானந்தா சாலையில் இன்று நடைபெறவுள்ள தவெகவின் கண்டன ஆர்ப்பாட்டடத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி என்று காவல்துறையினர் நிபந்தனை அளித்துள்ளனர்.
இதனிடையே, தவெக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்னைக்கு வருகைதரும் வெளிமாவட்ட தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை சிம்சன் சந்திப்பு அருகே கைகளில் தவெக கொடிகள், பதாகைகளுடன் தவெகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.