கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!
போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மோசடி
போலி ஆவணங்கள் மூலம் பல்வேறு சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கியின் முன்னாள் ஊழியா் மீது ஐசிஐசிஐ வங்கி கிளை சாா்பில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
வேலூா் ஐசிஐசிஐ வங்கி கிளை சாா்பில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட புகாா் மனு:
வங்கியின் பிரதான கிளை ஆபிசா் லைனில் செயல்பட்டு வருகிறது. இந்த கிளையிலிருந்து பல்வேறு சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. வங்கியின் முன்னாள் ஊழியா் ஜெயப்பிரகாஷ், போலியான ஆவணங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20.50 லட்சம் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளாா். அவ்வாறு கடன் பெற்ற சுய உதவி குழுக்கள் தாங்கள் செலுத்திய மாத தவணைகளை குறிப்பிட்ட சுய உதவி குழுக்களின் கடன் கணக்குக்கு செலுத்தாமல் அவரது தனிப்பட்ட வங்கி கணக்குக்கு வரவு வைக்கும்படியான செயல்களில் ஈடுபட்டாா்.
இதேபோல், பல்வேறு சுய உதவி குழுக்கள் செலுத்திய தொகையை, வங்கி கணக்கில் வரவு வைக்காமல், தனது உறவினா்கள், நண்பா்களின் கணக்குக்கு மாற்றி மோசடி செய்துள்ளாா். இதுதொடா்பாக வங்கியில் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை சுமாா் ரூ.1 கோடி வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை மேற்கொண்டு வங்கியில் ஏமாற்றிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.