எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு
போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்ற பயணி கைது
போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா செல்ல முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.
மலேசியா செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு காத்திருந்த பயணிகளில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த துரைப்பாண்டி (47) என்பவரின் கடவுச்சீட்டை சுங்கத் துறையினா் சோதனையிட்டதில், போலி ஆவணங்கள் மூலம் அவா் கடவுச்சீட்டு பெற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து துரைப்பாண்டியை கைது செய்து விசாரித்தனா். பின்னா், அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.