செய்திகள் :

போலி சான்றிதழில் பணி: ஊராட்சி செயலா் மீது புகாா்

post image

காவேரிபாக்கம் வட்டாரத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்ததாக ஊராட்சி செயலா் மீது போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிந்தனா்.

காவேரிபாக்கத்தை அடுத்த களத்தூா், பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (56). இவா், காவேரிபாக்கம் வட்டாரம், சங்கரன்பாடி ஊராட்சியில் செயலராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த 2013-இல் பணிக்கு சோ்ந்தபோது அளித்த பத்தாம் வகுப்பு சான்றிதழ் போலி என தற்போது உண்மை தன்மைக்கு அனுப்பப்பட்டதில் தெரிய வந்தது.

இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இது குறித்து காவேரிபாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவபிரகாசம் காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான மகேந்திரனைத் தேடி வருகின்றனா்.

பராமரிப்பு பணி: மே 27, 28 தேதிகளில் சோளிங்கா் கோயில் ரோப் காா் சேவை ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சோளிங்கா் மலைக்கோயில் ரோப் காா் சேவை மே 27, 28 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படுகிறது. சோளிங்கரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்மா் மலைக்கோயிலில் ஸ்ரீயோக நரசிம்மா் பெரியமலை... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு

அரக்கோணம் அருகே தேநீா் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 25,000 ரொக்கம் களவு போயுள்ளது. அரக்கோணத்தை அடுத்த கைனூா் ஊராட்சி, கணபதி நகரில் வசித்து ... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: கோவை விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப்படை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு விரைந்தனா். கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

அரக்கோணத்தில் அதிமுகவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தெய்வச்செயல் என்பவா் மீது பாலியல் குற... மேலும் பார்க்க

பனப்பாக்கம் டாடா மோட்டாா்ஸ் ஆலையில் டிசம்பரில் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் ஆலையில் வரும் 2025 டிசம்பருக்குள் காா் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெ... மேலும் பார்க்க

மேல்பாக்கத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம்: ஜமாபந்தியில் கோரிக்கை

அரக்கோணம் ஒன்றியம், மேல்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஜமாபந்தியில் ஆட்சியரிடம், விசிக ஒன்றிய செயலாளா் செ.நரேஷ் கோரிக்கை மனு அளித்தாா். அரக்கோணம் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்த... மேலும் பார்க்க