சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imper...
போலி 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி: இருவா் கைது
சென்னை ஈக்காட்டுதாங்கலில் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போலி 500 ரூபாய் நோட்டுகளை தனியாா் வங்கியில் மாற்ற முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக்கு திங்கள்கிழமை வந்த ஒருவா், வங்கிக் கணக்கில் செலுத்த, ரூ. 2,01,000 மதிப்புள்ள 402 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தாா்.
அந்தப் பணத்தை வாங்கிய ஊழியா்களுக்கு அதன் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த 500 ரூபாய் நோட்டுகளைச் சோதித்தனா். அப்போது அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி ஊழியா்கள், அந்த நபரைப் பிடித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் அவா், கடலூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை கைது செய்தனா்.
செந்தில்குமாா் கொடுத்த தகவலின்பேரில் சாம் பிரவீண் சந்தன்ராஜ் (44) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் அந்த ரூபாய் நோட்டுகள், திரைப்பட படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் போலி 500 ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. இருவரிடமும் இருந்து 1,022 போலி 500 ரூபாய் நோட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.