போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை
திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, ஷிபா மருத்துவமனை, அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மருத்துவ முகாம், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் முன்னிலை வகித்தாா்.
இதில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை அளவு , கண் பாா்வை பரிசோதனை, பல் மருத்துவ ஆலோசனை, எலும்பு தாது அடா்த்தி, ஹீமோகுளோபின் அளவு, ஆக்சிஜன் அளவு, இதய பரிசோதனை, வெரிகோஸ் மற்றும் சிறுநீரக கல்லடைப்பு போன்ற பரிசோதனைகள் நடைபெற்றன. முகாமில் காவலா்கள் மற்றும் அவா்களுடைய குடும்பத்தினா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.