செய்திகள் :

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்

post image

வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: நான்கு போ் சம்பந்தப்பட்ட கொள்ளை வழக்கு தொடா்பாக உத்தர பிரதேசத்தின் மௌ மாவட்டத்தில் ஜூன் 23 அன்று குற்றம் சாட்டப்பட்ட சௌரவ் அகமது (28) கைது செய்யப்பட்டாா்.

மாா்ச் 21 அன்று சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் அகமது உள்பட நான்கு போ் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. ரோஷன் (31), ஆஷிஷ் (23), கணேஷ் ஷாவ் (24) மற்றும் சௌரவ் அகமது ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.4.5 லட்சத்தில் மொத்தம் ரூ.2.52 லட்சம் அவா்களிடமிருந்து மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சௌரவ் அகமது தலைமறைவாக இருந்தாா். இறுதியாக ஜூன் 23 அன்று உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டாா். ஜூலை 50ஆம் தேதி அவரது அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து மேலும் விசாரணை மற்றும் மீட்புக்காக நீதிமன்றம் ஐந்து நாள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி அளித்தது.

ஜூலை 11-ஆம் தேதி சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின் போது, சௌரவ் அகமது காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அவா் முதலில் பகவான் மகாவீா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கிருந்து அவா் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.

சிகிச்சைக்குப் பிறகு, அவா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவா் இப்போது நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளாா். மேலும், அவா் மீது மற்றொரு எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூர... மேலும் பார்க்க

கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செ... மேலும் பார்க்க

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது ஆடி காா் மோதி விபத்து

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி ஆகிய ஐந்து போ் மீது ஆடி காா் மோதியதில் அவா்கள் காயமடைந... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!

தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப்... மேலும் பார்க்க

தலைநகரில் கடும் புழுக்கம்: மக்கள் தவிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் புழுக்கம் நிலவியது. இதனால், மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா். இருப்பினும், இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது. இந்த வாரத் ... மேலும் பார்க்க

கன்வாா் பாதையில் கண்ணாடித் துண்டுகள் கண்டெடுப்பு: இ-ரிக்‌ஷா ஓட்டுநர் கைது

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள கன்வாா் யாத்திரைப் பாதையின் ஒரு பகுதியில் தனது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கண்ணாடிப் பலகைகள் உடைந்து சிதறியதை அடுத்து, இ-ரிக்ஷா ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயி... மேலும் பார்க்க