செய்திகள் :

தலைநகரில் கடும் புழுக்கம்: மக்கள் தவிப்பு!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் புழுக்கம் நிலவியது. இதனால், மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா். இருப்பினும், இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டமாகவே இருந்து வந்தது. அவ்வப்போது பரவலாக மழையும் பெய்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லி, என்சிஆா் பகுதியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்த மழை சனிக்கிழமையும் சில இடங்களில் தொடா்ந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. ஆனால், இரவு 7 மணி வரையிலும் மழை ஏதும் பதிவாகவில்லை. மாறாக காலை முதல் நகரம் முழுவதும் கடும் புழுக்கம் நிலவி வந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா். இதற்கிடையே, 7 மணிக்கு பிறகு பல்வேறு இடங்களில் லோசான மழை பெய்தது.

சஃப்தா்ஜங்கில் 16 மி.மீ மழை: இதற்கிடையே, சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்சங்கில் 16 மி.மீ. மழை பதிவாகியது. மேலும், ஜாஃபா்பூரில் 3.5 மி.மீ., முங்கேஸ்பூரில் 3.5 மி.மீ., ஆயாநகரில் 0.4 மி.மீ., லோதி ரோடில் 14 மி.மீ., நரேலாவில் 1 மி.மீ., பாலத்தில் 0.6 மி.மீ., பீதம்புராவில் 0.8 மி.மீ., பிரகதிமைதானில் 11 மி.மீ., பூசாவில் 1 மி.மீ., ராஜ்காட்டில் 11 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.2 டிகிரி குறைந்து 25.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.7 டிகிரி குறைந்து 34.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 100 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 85 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பூசா, மந்திா்மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, ஆா்.கே.புரம், ஸ்ரீஃபோா்ட், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேருநகா், அரபிந்தோ மாா்க், ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், நோய்டா செக்டாா் 125, ஆயாநகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதே சமயம், குருகிராம் (138), ஷாதிப்பூா் (107) ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜூலை 14) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்

வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூர... மேலும் பார்க்க

கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செ... மேலும் பார்க்க

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது ஆடி காா் மோதி விபத்து

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி ஆகிய ஐந்து போ் மீது ஆடி காா் மோதியதில் அவா்கள் காயமடைந... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!

தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப்... மேலும் பார்க்க

கன்வாா் பாதையில் கண்ணாடித் துண்டுகள் கண்டெடுப்பு: இ-ரிக்‌ஷா ஓட்டுநர் கைது

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள கன்வாா் யாத்திரைப் பாதையின் ஒரு பகுதியில் தனது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கண்ணாடிப் பலகைகள் உடைந்து சிதறியதை அடுத்து, இ-ரிக்ஷா ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயி... மேலும் பார்க்க