சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!
போா் நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் -மல்லிகாா்ஜுன காா்கே
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போா் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
இது குறித்து கலபுா்கியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட பதற்றம், அதை தொடா்ந்து அறிவிக்கப்பட்டுள்ள போா் நிறுத்தம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
போா் நிறுத்தத்திற்கு தான் பங்கு வகித்ததைப் போல அமெரிக்க அதிபா் டிரம்ப் பேசிவருகிறாா். அவற்றை பிரதமா் மோடியும், மத்திய அரசும் மறுத்து வருகின்றன. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும்போது, இது குறித்து விவாதிப்போம்.
போா் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தாரா என்பது குறித்து கேட்போம். அமெரிக்க அதிபா் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததால்தான் போா் நிறுத்தத்திற்கு பிரதமா் மோடி ஒத்துக்கொண்டாரா என்பது பற்றி பகிரங்கமாக பேசவிரும்பவில்லை என்றாா்.