செய்திகள் :

ப வடிவ பள்ளி இருக்கைகள்: "மருத்துவர்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கணும்" - ஓபிஎஸ் வலியுறுத்தல்

post image

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைகள் குறித்து மருத்துவர்களைக் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி, முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓபிஎஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ, மாணவியரை நல்லவராகவும், வல்லவராகவும், புகழ் மிக்கவராகவும் வாழ வைக்க கல்வி மிகவும் அவசியம் என்பதன் அடிப்படையில் கட்டணமில்லாக் கல்வி தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.

ப வடிவில் பள்ளி வகுப்பறை இருக்கைகள்
ப வடிவில் பள்ளி வகுப்பறை இருக்கைகள்

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியை மாணவ, மாணவியர் பயில ஏதுவாக, மலையாளத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு 'ப' வடிவிலான அல்லது 'யு' வடிவிலான இருக்கைகள் கொண்ட வகுப்பறைகளை தென் மாநிலங்கள் உருவாக்கி வருகின்றன. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசும் சமீபத்தில் பிறப்பித்துள்ளது.

வகுப்பறைகளில் கடைசி இருக்கை என்கிற கோட்பாட்டினை ஒழிக்கும் வகையிலும், மாணவ மாணவியரிடையே சம வாய்ப்பினை அளிக்கும் பொருட்டும் 'ப' வடிவிலான இருக்கை திட்டத்தை தமிழ்நாடு கொண்டு வந்திருக்கிறது என்றாலும், இதில் உள்ள பாதக அம்சங்களை ஆராய்வது அரசாங்கத்தின் கடமை.

'ப' வடிவிலான இருக்கைகள் அமைக்கப்படுவதன் காரணமாக மாணவ, மாணவியர் கழுத்தை நேரடியாக வைத்து கரும்பலகையைப் பார்க்க முடியாமல், கழுத்தை நீண்ட நேரம் ஒருபுறமாக வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும்; இதன் காரணமாக தசைக்கூட்டு (Musculoskeletal) மற்றும் எலும்பியல் (Orthopaedic) பாதிப்புகள், குறிப்பாக பத்து வயதிற்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு ஏற்படும் என்றும்;

ஆசிரியர்களும் தங்கள் கழுத்தை இரு பக்கமும் திருப்பி மாணவ மாணவியருக்குக் கற்பிக்க வேண்டியிருப்பதால், அவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படும் என்றும்; ஆசிரியர்களுக்கு மிக தொலைவில் அமர்ந்து இருக்கும் மாணவ மாணவியருக்கு ஆசிரியர்கள் கற்பிப்பது காதில் விழாத நிலை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

மேலும், 'ப' வடிவிலான இருக்கைகள் அமைக்கப்பட்டால், தூரத்திலிருந்து பார்க்கும் அவசியம் மிகவும் குறைவாக உள்ள மாணவ, மாணவியருக்கு ஒளி விலகல் பிழைகள் (Refractive Errors) கவனிக்கப்படாத நிலை ஏற்படும் என்றும்; தற்போது நடைமுறையில் உள்ள இருக்கைகளில், பின் வரிசையில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் கரும்பலகையில் இருப்பதைப் படிக்க சிரமப்பட்டால், முன்கூட்டியே கண் பரிசோதனை செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில், திரை அரங்குகளில் உள்ள இருக்கைகள் முறை மிகவும் பொருத்தமானது என்றும், இதன் மூலம் சிறந்த தெரிவு நிலை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் இறுக்கம் வெகுவாக குறையும் என்பதுதான் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடிக் கவனம் செலுத்தி, ஆரோக்கியமான கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கண் மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து இருக்கைகள் குறித்து இறுதி முடிவு எடுக்குமாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

காமராஜர் விவகாரம்: 'குளிர்காய நினைக்கும் தீயவர்களுக்கு இடம் கொடுக்காதீர்' - ஸ்டாலின்

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரைப் பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.காமராஜர் அத... மேலும் பார்க்க

கழுகார்: குட்கா பிசினஸில் மோதிக்கொள்ளும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் டு மெளனம் காத்த இலைக் கட்சி நிர்வாகி

மோதிக்கொள்ளும் ஆளுங்கட்சி நிர்வாகிகள்!குட்கா பிசினஸில் போட்டி...பின்னலாடை நகரத்தில், வடமாநிலத் தொழிலாளர் அதிகம் என்பதால் அவர்களைக் குறிவைத்து சட்டவிரோத குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது. அந்தச்... மேலும் பார்க்க

`நோய் பாதித்த தெரு நாய்களைக் கருணைக் கொலை' - கேரள அரசின் அதிரடி முடிவு; காரணம் என்ன?

கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் மரணமடையும் அதிர்ச்சி சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் தெரு... மேலும் பார்க்க

'கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் கூட்டணிக்கு அழைக்கிறார்'- எடப்பாடிக்கு சிபிஎம் பதிலடி

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முனைப்பு காட்டி வருகி... மேலும் பார்க்க

`இங்க வந்திடுங்க’ - தாக்கரேவை அழைத்த பட்னாவிஸ்... மறைமுகமாக தாக்கிக்கொண்ட உத்தவ் - ஷிண்டே!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வேயிக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் சிவசேனா உடைந்த பிறகு முதல் முறையாக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், முன்னாள் முதல்வர்... மேலும் பார்க்க

RTE : 3 வருஷமா என்ன செய்தார் Anbil Mahesh? | ஸ்டாலினுக்கு புரிதலே இல்லை | Eshwaran Interview

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE) ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அவர்களுக்கான முழு க... மேலும் பார்க்க