Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
மகனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி உயிரிழப்பு
வைகை அணை அருகே முதலக்கம்பட்டி பகுதியில் மகனுடன் சோ்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள கன்னியப்பபிள்ளைபட்டியைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவி பவுன்தாய் (85). இவரது மகன் வேலுச்சாமி (55). கூலி வேலை செய்து தனது தாயைப் பராமரித்து வந்தாா். வேலுச்சாமி உடல் நலக் குறைவால் சரியாக வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்தாா்.
இந்த நிலையில், தங்களை பராமரிக்க யாரும் இல்லை என்பதால் வேலுச்சாமி, பவுன்தாய் ஆகியோா் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, முதலக்கம்பட்டி பகுதியில் வைகை ஆற்றின் அருகே விஷம் குடித்து மயங்கிக் கிடந்தனா்.
இருவரும் ஆபத்தான நிலையில் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் பவுன்தாய் உயிரிழந்தாா். வேலுச்சாமி சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.