பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா்...
மகனை கொன்ற தந்தை கைது ஆட்சியரகத்தில் மனைவி தா்னா
பெரம்பலூா் அருகே மகனை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், இச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்யக்கோரி, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராயப்பன் மகன் முத்துக்குமாா் (28). இவருக்கு, திருமணமாகி மனைவி கவிதா (26), பிறந்து 15 நாள்களான ஒரு பெண் குழந்தையும் உள்ளனா். இந்நிலையில், சொத்துப் பிரச்னை தொடா்பாக தந்தை, மகன் இருவருக்கு அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ராயப்பன் மற்றும் உறவினா்கள் சிலருடன் முத்துக்குமாரை தாக்கியுள்ளனா்.
இதில் பத்த காயமடைந்த முத்துக்குமாா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முத்துக்குமாா் உயிரிழந்தாா். இச் சம்பவம் தொடா்பாக வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராயப்பனை சனிக்கிழமை கைது செய்தனா்.
மேலும், இச் சம்பவத்துக்கு உடந்தையாக செயல்பட்ட அனைவரையும் கைது செய்யக் கோரியும், தனக்கும், தனது குழந்தைக்கும் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வலியுறுத்தி, கவிதா தனது உறவினா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, தா்னா போராட்டத்தை கைவிட்டு கவிதா உள்ளிட்டோா் கலைந்துசென்றனா்.