தைத் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் பிரமாண்ட கோலப்போட்டி... | Photo Album
மகப்பேறு சிகிச்சையில் பெண் பலி! மது அருந்த சென்ற மருத்துவர் இழப்பீடு வழங்க உத்தரவு!
மலேசியாவில் மகப்பேறு சிகிச்சையில் இருந்த பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த மருத்துவர்களை இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மலேசியாவில் 2019 ஆம் ஆண்டில் மகப்பேறுக்காக புனிதா மோகன் (36) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் சண்முகம், ரவி மேற்பார்வையில் புனிதாவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்த பின்னும் புனிதாவுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இருப்பினும், ரத்தப்போக்கு நின்று விடும் என்று கூறிய மருத்துவர் ரவி, தான் மது அருந்திவிட்டு சிறிது நேரம் கழித்து வருவதாக புனிதாவின் பெற்றோரிடம் கூறிவிட்டு மருத்துவமனையைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான சண்முகமும் மருத்துவமனையைவிட்டு வெளியே சென்றுள்ளார்.
இதையும் படிக்க:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு - இபிஎஸ்
இந்த நிலையில், புனிதாவுக்கு ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால், நாப்கீன்களை வைத்து ரத்தப்போக்கை நிறுத்த செவிலியர்கள் முயற்சித்தனர். நாப்கீனின் குளிர்ச்சியால் புனிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக புனிதாவின் தாயார் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, புனிதாவுக்கு தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டதால், மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தால், புனிதாவை வேறொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி புனிதா உயிரிழந்து விட்டதாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
2019 ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்துக்கு 2025 ஜனவரியில் மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புனிதா மோகனின் உயிரிழப்புக்கு காரணமான இரண்டு மருத்துவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 1.3 மில்லியன் டாலர் (ரூ. 11.4 கோடி) வழங்குமாறு உத்தரவிட்டது.