செய்திகள் :

மகளின் குறுஞ்செய்தியால் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தேன்: சூர்யா

post image

நடிகர் சூர்யா தன் மகள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் மற்றும் சில ஆக்சன் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்ததால் இப்படம் இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடி வசூலைக் கடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, படத்தின் புரமோஷனுக்காக சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் மூவரும் இணைந்து கலந்துரையாடல் செய்த விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அதில், சூர்யாவிடம் இசை மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டா என கார்த்திக் சுப்புராஜ் கேட்டார்.

அதற்கு சூர்யா, “நிறைய பாடல்களைக் கேட்பேன். குறிப்பாக, சோகப் பாடல்களைக் கேட்கப் பிடிக்கும். என் மகள் மேல் படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறார். அதனால், அண்மை காலமாக சித்தா படத்தில் இடம்பெற்ற, ‘என் பார்வை உன்னோடு’ பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஒருநாள் ரெட்ரோ படப்பிடிப்பின்போது அதிகாலை 3 மணிக்கு என் மகளிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அப்போது, அப்பாடலைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். திடீரென அந்த வேளையில் மகளிடமிருந்து வந்த எதிர்பாராத குறுஞ்செய்தியால் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தேன். பாடல்கள் நம் வாழ்க்கையுடன் தொடர்புடைய நினைவுகளாகவும் நீடிக்கக்கூடியவை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: துல்கர் சல்மானின் ‘ஐயம் கேம்’ படப்பிடிப்பு துவக்கம்!

அதர்வாவின் டிஎன்ஏ வெளியீடு அப்டேட்!

நடிகர் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு டிஎன்ஏ படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கி... மேலும் பார்க்க

ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் சிறப்பு விடியோ!

நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்த நாளை முன்னிட்டு ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்துள்ளனர். நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தன் முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா மற்... மேலும் பார்க்க

10-ல் 5 கதை சூரிக்காகவே எழுதப்படுகிறது: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் சூரி குறித்து பேசியுள்ளார்.நடிகர்கள் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவான மாமன் திரைப்படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பிரசாந்த் ... மேலும் பார்க்க

சூப்பா்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு

ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் பங்கேற்கின்றனா். முதல் சுற்றிலேயே அவா்கள் நேருக்கு நோ் சந்திக்கின்றனா்.கடந்த ஜனவ... மேலும் பார்க்க

மல்லோா்காவை சாய்த்த ஜிரோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோா்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக கிறிஸ்டியன் ஸ்டுவானி 10-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்... மேலும் பார்க்க

மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை: சூரி

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.லார்க்... மேலும் பார்க்க