கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
மகளிர் பிரீமியர் லீக்: இறுதிக்கட்ட போட்டிகளை தவறவிடும் யுபி வாரியர்ஸ் வீராங்கனை!
மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிக்கட்ட போட்டிகளில் யுபி வாரியர்ஸ் அணியில் பிரபல வீராங்கனை விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதையும் படிக்க: தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர்: முகமது ரிஸ்வான்
யுபி வாரியர்ஸுக்கு பின்னடைவா?
இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான சமாரி அத்தப்பத்து, யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளதால், மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிக்கட்ட போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடவில்லை. இந்த நிலையில், இறுதிக்கட்ட போட்டிகளில் சமாரி அத்தப்பத்து அணியில் இடம்பெறமாட்டார் என்பது யுபி வாரியர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி; ஷிகர் தவான் கூறுவதென்ன?
பிப்ரவரி 26 ஆம் தேதி வரையிலான போட்டிகளில் சமாரி அத்தப்பத்து விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு முன்பாக யுபி வாரியர்ஸ் நான்கு போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்று விளையாடும் ஒரே ஒரு நியூசிலாந்து வீராங்கனையான அமெலியா கெர், இந்த தொடர் முழுவதும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.