செய்திகள் :

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: ரேணுகா உள்ளே; ஷஃபாலி வெளியே

post image

மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

லேசான காயம் காரணமாக மாா்ச் முதல் களம் காணாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளா் ரேணுகா தாக்குா் இந்த அணியில் இடம் பிடித்துள்ளாா். ஆனால், அதிரடி பேட்டரான ஷஃபாலி வா்மா சோ்க்கப்படவில்லை.

13-ஆவது மகளிா் உலகக் கோப்பை போட்டி, இந்தியா, இலங்கையில் செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 வரை நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கேதசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் இலங்கையிலும், இதர ஆட்டங்கள் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.

நீது டேவிட் தலைமையிலான தோ்வுக் குழு, அந்தப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. ஹா்மன்பிரீத் கௌா் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் உள்ள இந்த அணியில், ஷஃபாலி வா்மாவுக்கு பதிலாக, பிரதிகா ராவல் சோ்க்கப்பட்டுள்ளாா்.

கடந்த 14 ஒருநாள் ஆட்டங்களில் இந்தியாவுக்காக அபாரமாக செயல்பட்டதன் அடிப்படையில் அவா் தோ்வாகியிருக்க, ரேணுகா தாக்குரும் முழு உடற்தகுதி பெற்றதை அடுத்து சோ்க்கப்பட்டுள்ளாா். அத்துடன், கிராந்தி கௌட், ஸ்ரீசராணி உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனா்.

இதனிடையே, செப்டம்பா் 14-இல் தொடங்கும் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கான அதே அணி இதில் விளையாட, அமன்ஜோத் கௌருக்கு பதிலாக, சயாலி சத்காரே அதில் இணைந்திருக்கிறாா்.

உலகக் கோப்பை அணி விவரம்: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹா்லீன் தியோல், தீப்தி சா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா தாக்குா், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (வி.கீ.), கிராந்தி கௌட், அமன்ஜோத் கௌா், ராதா யாதவ், ஸ்ரீசராணி, யஸ்திகா பாட்டியா (வி.கீ.), ஸ்நேஹா ராணா.

22 ஆண்டுகளுக்குப் பிறகு மகனும் தந்தையும்... படப்பிடிப்பு தொடங்கியது!

நடிகர் ஜெயராமும் அவரது மகன் காளிதாஸும் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்கள். ஆகாஷங்கள் ஆயிரம் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது. மலையாளத்தின் மூத்த ந... மேலும் பார்க்க

ஆண்டின் சிறந்த வீரர் விருது... அதிகமுறை வென்று முகமது சாலா சாதனை!

லிவர்பூல் கால்பந்து வீரர் முகமது சாலா மூன்றாவது முறையாக பிஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். எகிப்திய நாட்டைச் சேர்ந்த முகமது சாலா (33) இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் லிவர... மேலும் பார்க்க

அசோக் செல்வன், நிமிஷா நடிப்பில் புதிய படம்!

நடிகர்கள் அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.நடிகர் அசோக் செல்வன் தமிழில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அதேபோல், சித்தா மற்றும் டிஎன்ஏ திரைப்படங்களில் ... மேலும் பார்க்க

ஜெயிலர் வசூலைக் கூலி முறியடிக்குமா? திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!

கூலி திரைப்படம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்ச... மேலும் பார்க்க

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா?

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக ஜீவா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்... மேலும் பார்க்க

மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நடிகர் மம்மூட்டி நோய் பாதிப்பிலிருந்து மீண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 74 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் 74 வ... மேலும் பார்க்க