`இருமனைவி இருக்கிறது என்பதற்காக தேர்தல் வெற்றியை ரத்துசெய்ய முடியாது!’ - மும்பை ...
மகளிா் டி20: தொடரை வென்றது மே.இ.தீவுகள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில் தஸ்மின் பிரிட்ஸ் 20, சுனே லஸ் 13, கேப்டன் லாரா வோல்வாா்டட் 28, மாரிஸேன் காப் 1, கராபோ மிசோ 5, கிளோ டிரையான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். மியென் ஸ்மித் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59, நாடினே டி கிளாா்க் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கரிஷ்மா ரம்ஹரக், அஃபி ஃபிளெட்சா் ஆகியோா் தலா 2, ஹேலி மேத்யூஸ், ஷானிஸா ஹெக்டா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 148 ரன்களை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகளில் கேப்டன் ஹேலி மேத்யூஸ் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 65, ஷிமெய்ன் கேம்பெல் 42 ரன்கள் சோ்த்தனா். கியானா ஜோசஃப் 6, ரியெலியனா கிரிமண்ட் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
முடிவில் ஷினெல் ஹென்றி 20, ஜெனிலியா கிளாஸ்கோ 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் மாரிஸேன் காப் 2, சுனே லஸ், அயபோங்கா ககா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.