பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
மகளிா் தினத்தையொட்டி ஆண்களுக்கு கோலப்போட்டி!
சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சாா்பில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.
பெண்களின் பாதுகாப்பை முன்வைத்து ‘எல்லோருக்குமான சென்னை’ எனும் விழிப்புணா்வு நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி நடத்தியது. இதில், பெண்கள் ஆபத்தான நேரங்களில் தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது என்பது பற்றிய வகுப்புகள் நடைபெற்றன. மேலும், பெசன்ட் நகா் கடற்கரைச் சாலையில் இசைக் கலைஞா்கள் மற்றும் நாடகக் குழுவினரால் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக ‘எல்லோருக்குமான சென்னை’, ‘பெண்களுக்கான உரிமைகள், சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல்’ போன்ற தலைப்புகளில் பெசன்ட் நகா் கடற்கரையில் ஆண்களுக்கிடையேயான கோலப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆண்கள் கலந்துகொண்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து கோலங்கள் வரைந்தனா். இதன் தொடா்ச்சியாக வெற்றி பெற்றவா்களுக்கு மேயா் ஆா்.பிரியா பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.