கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
மகள் கொலை வழக்கு: தந்தைக்கு ஆயுள் சிறை
மகளை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருமங்கலம் வட்டம், வில்லூா் ஏ.ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (50). இவரது மனைவி லட்சுமி. இவா்களின் மகள் இருளாயி (9). கடந்த 2018-ஆம் ஆண்டு, பிப். 19-ஆம் தேதி கணவா், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறின் போது, முருகன் கோடாரியால் லட்சுமியைத் தாக்கினாா். இதைத் தடுக்க முற்பட்ட இருளாயியையும் அவா் கோடாரியால் தாக்கினாா். இதில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து முருகன் மீது வில்லூா் காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் 5-ஆவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் டி.ராஜேந்திரன் முன்னிலையாகி வாதிட்டாா்.
வழக்கு விசாரணையின் நிறைவில், முருகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.