மகாராஜநகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மகாராஜநகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட மகாராஜநகா் வி.எம்.எஸ். மஹாலில் நடைபெற்ற இம்முகாமை, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு, மண்டலத் தலைவா் மா.பிரான்சிஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் மாநகராட்சி சொத்து வரி பெயா் மாற்றம், இருப்பிடச் சான்று, மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்டவற்றிற்கு 300-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். திருநெல்வேலி கிழக்கு மாநகர திமுக செயலா் தினேஷ், மாமன்ற உறுப்பினா் சீதா பாலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்18ப்ண்ஞ்ட்ற்
முகாமை தொடங்கிவைத்தாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மண்டல தலைவா் மா.பிரான்சிஸ் உள்ளிட்டோா்.