பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
மகாராஜபுரம் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
செம்பனாா்கோவில் அருகே பரசலூா் ஊராட்சி மகாராஜபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா், யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, கோயில் விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கன்னிகா பரமேஸ்வரிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.