செய்திகள் :

மகாராஷ்டிரா: "உழவு மாடு வாங்க பணமில்லை..." - மனைவியின் துணையோடு கலப்பையால் தானே உழுத விவசாயி

post image

நாட்டிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கருதப்படும் மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

தற்கொலையைத் தடுக்க மாநில அரசு பல முறை விவசாய கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அப்படி இருந்தும் தற்கொலை சம்பவங்கள் குறையவில்லை.

மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பாதாஸ் பவார்(73). இவருக்குச் சொந்தமாக 2.3 ஏக்கர் நிலம் இருக்கிறது.

வயதான காலத்திலும் மனம் தளராமல் தனது மனைவியின் துணையோடு அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவரது மகன் புனேயில் வேலை செய்து வருகிறார். மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் அம்பாதாஸுடன் வசித்து வருகின்றனர்.

அவர்களது படிப்பு செலவை அம்பாதாஸ்தான் கவனித்துக்கொள்கிறார். விவசாயத்தில் போதிய வருமானம் வராத காரணத்தால் வெளியில் கடன் வாங்கி படிப்புக்குச் செலவு செய்து வருகிறார்.

விவசாயிகள்
விவசாயிகள்

பருத்தி பயிரிட்டு இருந்தார். அதனை அறுவடை செய்யக்கூடப் பணம் இல்லை. இதனால் தனது மனைவி முக்தாபாய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் துணையோடு பருத்தியை அறுவடை செய்தார்.

அடுத்தகட்டமாக நிலத்தில் பயிரிட நிலத்தைத் தயார்ப்படுத்த உழவடிக்கத் தேவையான காளை மாடுகள் வாங்கவும் பணம் இல்லை. காளை மாடுகளை வாடகைக்கு எடுப்பதாக இருந்தால் அதற்குத் தினமும் ரூ 2.500 கொடுக்க வேண்டும். அதற்கும் பணமில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் நிலத்தில் உழவு உழுவதற்கு மாடுகள் இல்லாமல் வெறும் கலப்பையை எடுத்துக்கொண்டு தனது மனைவியை அழைத்துக்கொண்டு அம்பாதாஸ் தோட்டத்திற்குச் சென்றார்.

அங்குத் தனது மனைவியிடம் கலப்பையைப் பிடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அம்பாதாஸ் கலப்பையைத் தானே பிடித்து இழுத்து உழவு உழ ஆரம்பித்தார்.

வயதான காலத்தில் அம்பாதாஸ் உழவு உழுத காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. அம்பாதாஸ் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்.

அரசு கடனைத் தள்ளுபடி செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இது வரை தள்ளுபடி செய்யப்படவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு 5 கோடி வரை கடன்!' ஐ.ஓ.பி வங்கியின் தலைவர் தகவல்!

இயற்கை விவசாயம் வேகமாக பரவி வருகிறது. அதை முன்னெடுக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இன்ஃபினிட் சேவா, ரிச் பிளஸ் மற்றும் அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர் ஆகிய அமைப்புகள் இணைந்து 'இயற்கை விவசாயத்தை த... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு ஜூலை 32.24 டிஎம்சி நீர் திறப்பு; கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி தண்ணீரைப் பங்கிட்டு கொள்வதில் நீண்டகாலமாகப் பிரச்னை நிலவி வருகிறது. நேற்று (ஜூன் 28) காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம், டெல்லியில் காவிரி மேலா... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்சி.கரிகாலன்,திருத்துறைப்பூண்டி,திருவாரூர்.81224 70102காட்டுயானம் விதைநெல் மற்றும் கைகுத்தல் அரிசி, பூனைக்காலி விதைகள்.கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இயற்கை முறையில் ... மேலும் பார்க்க

ஈரோடு: மதிமுக கட்சியின் 31வது பொதுக்குழுக் கூட்டம்; நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் வருகை | Photo Album

மதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்... மேலும் பார்க்க

லண்டனில் MBA; கிராமத்தில் பேரீச்சை விவசாயம்... வருடம் ரூ.40 லட்சம் ஈட்டும் பட்டதாரி செல்வது என்ன?

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் லண்டன் சென்று எம்.பி.ஏ. முடித்துவிட்டு இப்போது விவசாயம் செய்து வருகிறார். ஜால்னா அருகில் உள்ள பார்த்கேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குகே என்பவர் லண்டன் சென்ற... மேலும் பார்க்க