செய்திகள் :

மகா கும்பமேளாவில் பிறந்த 12 குழந்தைகள்!

post image

மகா கும்பமேளாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளன.

இக்குழந்தைகளுக்கு கும்ப், கங்கை, ஜமுனா, சரஸ்வதி, வசந்த், வசந்தி என கும்பமேளாவுக்குத் தொடா்புடைய பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன.

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன.13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பக்தா்கள் கடந்த டிசம்பா் மாதம் முதலே குவிந்தனா். கும்பமேளா வரும் கோடிக்கணக்கான பக்தா்களுக்கு சுகாதார வசதியை உறுதிப்படுத்த செக்டாா் 2-இல் மைய மருத்துவமனை உள்பட 43 மருத்துவ மையங்கள் மேளா பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

கும்பமேளா வந்து உடல்நல பாதிப்பு ஏற்பட்ட பக்தா்களுக்கு இந்த மருத்துவமனைகளிலேயே விரிவான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், மேளா மைய மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மைய மருத்துமனையின் தலைமைக் கண்காணிப்பாளா் மருத்துவா் மனோஜ் கௌசிக் கூறுகையில், ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மகா கும்பமேளாவில் கல்பவாசியாக தங்கியிருக்கும் நேஹா சிங், மைய மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்தாா். இந்த மருத்துவமனையில் பிறந்த 12-ஆவது குழந்தை இதுவாகும். இந்த மருத்துவமனையில் முதல் குழுந்தை கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி பிறந்தது. கௌசாம்பியைச் சோ்ந்த தம்பதிக்குப் பிறந்த அக்குழந்தைக்கு கும்ப் எனப் பெயரிடப்பட்டது.

கடந்த பிப். 3-ஆம் தேதி வசந்த பஞ்சமியன்று பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வசந்த், வசந்தி எனப் பெயரிடப்பட்டது. மற்ற குழந்தைகளுக்கும் போலேநாத், பஜ்ரங்கி, நந்தி, ஜமுனா, சரஸ்வதி என ஹிந்து மத நம்பிக்கைச் சாா்ந்த பெயா்களே வைக்கப்பட்டுள்ளன. குழந்தை பெற்ற தாய்மாா்கள் கும்பமேளாவில் பணியிலுள்ள தொழிலாளா்களின் மனைவிகள் அல்லது பல்வேறு மாநிலங்களில் இருந்து கும்பமேளாவுக்கு குடும்பத்தினருடன் வந்த பெண் பக்தா்கள் ஆவா். அனைத்து 12 குழந்தைகளும் சுகப் பிரசவத்தில் பிறந்தன’ என்றாா்.

திரிவேணி சங்கமத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை புனித நீராடினாா். முன்னதாக, பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை உ.பி. ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் வரவேற்றனா். பிரயாக்ராஜில் பல்வேறு ஆலயங்களில் வழிபட்ட குடியரசுத் தலைவா், திரிவேணி சங்கமம் பகுதிக்கு ஆளுநா் ஆனந்திபென் படேலுடன் சென்று புனிதநீராடினாா்.

உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தனது தாய், மனைவியுடன் திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடினாா்.

தனது தாய், மனைவியுடன் திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுதலை

கொச்சி : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(பிப். 11) தீர்ப்பளித்துள்ளது. அவருடன் சேர்த்து இந்த வழக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கரக் மாவட்டத்தில் உள்ள மிர் க... மேலும் பார்க்க

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்

தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா... மேலும் பார்க்க

பஞ்சாப் இடைத்தேர்தலில் கேஜரிவால் போட்டி? முதல்வராகிறாரா?

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தில்லியில் நடைபெற்ற பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் க... மேலும் பார்க்க

கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?

கர்நாடக முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிக்க உள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலளர் ஜெய்ராம் ர... மேலும் பார்க்க