செய்திகள் :

மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்குர்!

post image

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய முன்னாள் அமைச்சா் அனுராக் சிங் தாக்குர் புனித நீராடினார்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர். மகா கும்பமேளா பிப்ரவரி 26 அன்று முடிவடைகிறது.

மகர சங்கராந்தி, மௌனி அமாவாசை, பசந்த் பஞ்சமி ஆகிய மூன்று புனித அமிர்த ஸ்நான விழாக்கள் முடிவடைந்த நிலையிலும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் புனித நீராடுவதற்காகத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்.

மௌனி அமாவாசையன்று மட்டும் சுமார் 8 கோடி பக்தர்கள் புனித நீராடினர், மகர சங்கராந்தி அன்று சுமார் 3.5 கோடி பக்தர்களும், வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பக்தர்களும், ஜனவரி 30, பிப் 1 ஆகிய தேதிகளில் தலா 2 கோடிக்கும் அதிகமான பக்தர்களும், பௌஷ் பூர்ணிமா அன்று 1.7 கோடி பக்தர்களும் நீராடினர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர்.

ஹேமா மாலினி, அனுபம் கெர் போன்ற நடிகர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், நடன இயக்குனர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!

தொடர்ந்து பாஜக தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான அனுராக் சிங் தாக்குர் இன்று மகா கும்பமேளாவில் தனது குடும்பத்தினருடன் நீராடினார்.

"மகா கும்பமேளாவில் புனித நீராடி, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய தெய்வீக ஆறுகள் சங்கமம் ஆகும் கரையில் அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். கங்கை, யமுனை, சரஸ்வதியின் ஆசீர்வாதங்கள், அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தைக் கொண்டுவரட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

உ.பி. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்த பாஜக!

உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தில்லி பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்த... மேலும் பார்க்க

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: பிரியங்கா

தலைநகரில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை தெரிவித்தார். தில்லியில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி தோல்வியைத் தேர்தல... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தோல்வி: தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல்!

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில், ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில், தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பார்க்க

தில்லி கான்ட், கோண்ட்லி தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி!

தில்லி கான்ட் தொகுதியில் ஆம் ஆத்மியின் வீரேந்தர் சிங் கடியன் 2,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 13 சுற... மேலும் பார்க்க

பிரதமர் மோடி, தில்லி மக்களுக்குக் கிடைத்த வெற்றி : கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கும் தில்லி மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று புது... மேலும் பார்க்க

தலைநகரில் பாஜக ஆட்சி முதல்வராகிறாரா பர்வேஷ்?

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், பாஜகவின் பர்வேஷ் சாயிப் சிங் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 70 தொகுதிகள் கொண்... மேலும் பார்க்க