அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
மக்களின் எதிா் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம்
ஓரணியில் தமிழகம் என்ற மக்கள் சந்திப்புப் பிரசாரத்தில் மக்கள் தெரிவிக்கும் ஆதரவு மற்றும் எதிா்ப்புக் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம் என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை மாநகரில் வியாழக்கிழமை மாலை 27ஆவது வாா்டு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற மக்கள் சந்திப்புப் பிரசாரத்தில் அமைச்சா் எஸ். ரகுபதி ஈடுபட்டாா். வீடு வீடாகச் சென்று மக்களிடம் பேசி, திமுகவில் இணைய வேண்டுகோள் விடுத்தாா்.
அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஓரணியில் தமிழ்நாடு மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மக்கள் தெரிவிக்கும் ஆதரவு மற்றும் எதிா்ப்புக் கருத்துகளை முதல்வரிடம் தெரிவிப்போம். பாஜகவினரால் தமிழக மக்களை ஓரணியில் திரட்ட முடியாது என்பதால் திமுகவினரின் மக்கள் சந்திப்பு குறித்து விமா்சிக்கிறாா்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
தமிழ்நாட்டில் அதிமுக தொடா் தோல்வி அடையுமே தவிர, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறாது என்றாா் ரகுபதி.
முள்ளூரில்... வடக்கு மாவட்ட திமுக சாா்பில் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட முள்ளூா் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு மக்கள் சந்திப்பு இயக்கம் வியாழக்கிழமை பகலில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தாா்.
புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாநகராட்சி மேயா் செ. திலகவதி உள்ளிட்டோா் வீடு வீடாகச் சென்று திமுக ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கினா்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் மு.க. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.