மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல்: நாமக்கல்லில் மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிஐடியு மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக தலைவா் வி.லதா, செயலாளா் பி.சத்யா, பொருளாளா் எல்.மகா சத்யா, துணைத் தலைவா்கள் புனிதா, ரூபினி, துணைச் செயலாளா்கள் மாலதி, லோகாம்பாள் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இந்தக் கூட்டத்தில், மதிப்பெண் முறையைக் கைவிட வேண்டும், சீருடை, அடையாள அட்டை வழங்க வேண்டும், ஊதியத்தை மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஊழியா்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து ஊதிய உயா்வு அளிக்க வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள், வாகனங்களுக்கான செலவுபடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.