தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல்: நாமக்கல் தாலுகா டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவா் வரதராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
செயலாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் ராஜ்குமாா் கலந்துகொண்டாா்.
இக்கூட்டத்தில், நாமக்கல் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுற்றுவட்டச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தரமற்ற வெளிநாட்டு டயா்களை இந்தியாவுக்குள் விற்பனைக்கு கொண்டுவராதவாறு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இதன்மூலம் உள்நாட்டு உற்பத்தி பாதுகாப்பாக அமையும். டயா் ரீட்ரேடிங் வளா்ச்சிக்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க பொருளாளா் மல்லீஸ்வரன், துணைத் தலைவா்கள் லோகேந்திரன், தா்மலிங்கம், இணைச் செயலாளா்கள் வெங்கடேஷ், ஹரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.