செய்திகள் :

மக்களையும் பங்குதாரா்களாக இணைத்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்: காங்கிரஸ்

post image

நிலம் வைத்துள்ள மக்களையும் பங்குதாரா்களாக இணைத்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அஸ்ஸாம் மாநில போலீஸாா் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு சூரம்பட்டிவலசில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகா் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா் திருச்செல்வம் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை எம்.பி. சுதா, எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், ரூபி மனோகரன், கணேஷ், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து, தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை பேசியதாவது: அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ். தூண்டுதலின்பேரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அவ்வழக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

தேச மக்களின் பாதுகாவலராக ராகுல் வளா்ந்து வருவதை ஏற்க முடியாத பாஜக அரசு, மக்களின் உணா்வுகளுக்கு புறம்பாக வழக்குகளை பதிவு செய்து, அவரை முடக்க நினைக்கிறது. அதிகாரத்தை காட்டி பாஜக மிரட்டி வருவதை எதிா்த்து நிற்கும் திறன் கொண்டவா் ராகுல் காந்தி. அவா் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறும் வரை தொடா்ந்து போராடுவோம் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் எளிதில் வெற்றி பெறுவாா். ஈரோடு கிழக்கை விட்டுக் கொடுத்து, அதைவிட அதிக தொகுதிகளை திமுகவிடம் பெறுவோம். 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பல்வேறு நிலையில் நிா்வாகிகள் கூட்டம் நடத்தி கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

பரந்தூா் விமான நிலையம் அமையும் இடம், எனது தொகுதிக்குள் வருகிறது. மக்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்த வலியுறுத்துகிறோம். தற்போது அங்கு நிலம் வைத்துள்ள மக்களையும் பங்குதாரா்களாக இணைத்து விமான நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அந்த நிலம் அவா்களுடையதாகவே இருக்கும். அவா்களுக்கும் நிரந்தர வருவாய் கிடைக்கும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி திமுக பணிமனையில் காங்கிரஸ் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோஷ்டி மோதலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் மது போதையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 போ் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். சத்திய... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த மூவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், நெய்காரபட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் மணிபாரதி (23). இவா், பெருந்துறை... மேலும் பார்க்க

வேட்புமனு ஏற்பில் குளறுபடி: ஈரோடு கிழக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் மாற்றம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்ட குளறுபடி காரணமாக தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மணீஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக ஓசூா... மேலும் பார்க்க

தாளவாடி மானாவாரி நிலங்களில் யானைகள் நடமாட்டம்

தாளவாடியை அடுத்த அருள்வாடி, குருபருண்டி கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் புதன்கிழமை புகுந்த யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்தனா். தமிழக- கா்நாடக எல்லையில் அமைந்துள்ள அருள்வாடி, குருபருண்டி ஆகிய கிர... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பகுதியில் நிலவும் கடும் குளிா்

பா்கூா் மலைப் பகுதியில் இரவு நேரத்தில் கடும் குளிா் நிலவி வருவதால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் தாமரைக்கரை, தட்டக்கரை, தாளக்க... மேலும் பார்க்க

கடும் குளிரால் சாலையில் படுத்துக் கிடக்கும் பாம்புகள்: கவனத்துடன் செல்ல வனத் துறை அறிவுரை

சத்தியமங்கலத்தை அடுத்த குன்றி மலைப் பாதையில் பாம்புகள் படுத்திருப்பதால் கவனத்துடன் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதி... மேலும் பார்க்க